சொட்டு நீர் பாசனத்துடன் முருங்கை பயிரிட்டுள்ள காட்சி. 
உள்ளூர் செய்திகள்

உடன்குடி வட்டார பகுதியில் சொட்டு நீர் பாசனத்துடன் முருங்கை விவசாயம் தீவிரம்

உடன்குடி வட்டார பகுதியில் சொட்டு நீர் பாசனத்துடன் கூடிய முருங்கை விவசாயம் தீவிரமாக நடந்து வருகிறது.

உடன்குடி:

உடன்குடி வட்டாரப் பகுதிக்கு உட்பட்ட 18 பஞ்சாயத்து பகுதிகளிலும் செம்மணல் நிறைந்த பகுதிமிக அதிகமாகவே உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கடுமையான வறட்சியில் சிக்கிய  பனை, தென்னை மரங்கள் அழிந்தது.

காட்டு செடிகளும், உடை மரங்களும் தானாக வளர்ந்து, விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு உவர்பு நிலமாக மாறியதால் இந்த நிலங்களை கிடப்பில் போட்டு விட்டனர்.

கடந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்து, குளம் குட்டைகள் எல்லாம் முழுமையாக நிரம்பியது. சுமார் 40 வருடமாக கண்டு பிடிக்கப்படாத குளங்களை கண்டுபிடித்து மழைத் தண்ணீரால் நிரப்பப்பட்டது.

நல்ல  தண்ணீர் உள்ள விவசாய நிலமாக மாறியது. அதனால்தற்போது இப்பகுதியில் விவசாயம் தீவிரமாக நடக்கிறது. இப்பகுதியில் உள்ள காட்டு செடிகள், உடை மரங்களை முழுமையாக வெட்டி அப்புறப்படுத்திவிட்டு. குறைந்தகாலங்களில் வரு மானம் தரும் விவசாயத்தைப் பயிரிட்ட விவசாயிகள் முனைப்புடன் செயல்படு கின்றனர்.

மேலும் வேலைக்கு ஆள்போட்டு தண்ணீர் பாய்ச்சுவதற்கு பதில், செம்மணல் தேரியில் சொட்டு நீர்பாசனம் அமைத்து முருங்கை விவசாயம் தீவிரமாக செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT