அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். 
உள்ளூர் செய்திகள்

வாகைகுளத்தில் மத்திய கூட்டுறவு வங்கி கிளை - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று திறந்து வைக்கிறார்

வாகைகுளத்தில் மத்திய கூட்டுறவு வங்கி கிளை அமைக்கப்பட்டது. அதனை இன்று மாலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைக்கிறார்.

மாலை மலர்

உடன்குடி:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று (சனிக்கிழமை) மாலை 3.30 வாகைகுளம் மத்திய கூட்டுறவு வங்கி கிளை திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார். 

மாலை 5 மணிக்கு ஆறுமுகநேரி கால்பந்தாட்ட பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார். நாளை (ஞாயிற்றுகிழமை) காலை 10 மணிக்கு காயல்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடுநிதியில் கூடுதல் பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நட்டுகிறார். 

காலை10:30 மணிக்கு காயல்பட்டினம் ஓடக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கூடுதல் பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார். 

பகல் 11 மணிக்கு நடுநாலு முலைக்கிணற்றில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்மேம்பாட்டு நிதியில் கூடுதல் பள்ளி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மாலை 5 மணிக்கு காயல்பட்டினத்தில் கால்பந்தாட்ட அணியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார். 

இரவு 7 மணிக்கு சாத்தான்குளத்தில் நடைபெறும் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.