கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

பேய்க்குளம் பகுதியில் சாலையில் திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பேய்க்குளம் பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் உள்ளது. எனவே இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாலை மலர்

சாத்தான்குளம்:

சாத்தான்குளத்தில் இருந்து பேய்க்குளம் வழியாக  நெல்லை  செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக ஏராளமானோர் இருசக்கர வாகனம் மற்றும்  இதர வாகனங்களில் சென்று திரும்புகின்றனர்.

இதில் பேய்க்குளம், பனைக்குளம், கருங்கடல் பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சாலையிலேயே சுற்றித்திரிந்தும், படுத்தும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. சில நேரங்களில் அவை வாகனத்தில் விழுந்து விபத்தை ஏற்படுத்துகிறது. இதில் பலர் காயமடைந்து செல்லும் நிலை உள்ளது.

இது தொடர்பாக அரசு  அதிகாரிகள் கண்காணித்து சாலையில் சுற்றித்திரியும் ஆடு, மாடு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும்  விபத்து ஏற்படுத்தும் வகையில் திரியும் ஆடு, மாடுகளை பிடித்து அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.