கடையில் கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்த போது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

சாத்தான்குளம் அருகே மதுக்கடையில் பூட்டை உடைத்து திருட்டு

சாத்தான்குளம் அருகே உள்ள மணிநகர் மதுக்கடையில் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள மணிநகர் மதுக்கடையில் இன்று அதிகாலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கடை சூப்பர்வைசர் ராஜனுக்கு  தகவல் தெரிவித்தனர்.

அவர் தட்டார்மடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தியபோது கடையின் உள்ளே இருந்த ரூ.2 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.

மேலும் மது பாட்டில்கள் எவ்வளவு திருடப்பட்டுள்ளன? என்பது குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.  அங்கு தூத்துக்குடி கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடந்தது.

SCROLL FOR NEXT