சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள தேரிப்பனை வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெபத்துரை (வயது36). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த
26-ந்தேதி காலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
அவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் காணவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை அற்புதராஜ் மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.