விழிப்புணர்வு நடைபயிற்சியை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

உலக ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு நடைபயிற்சி

உலக ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு நடைபயிற்சி நடைபெற்றது.

மாலை மலர்

தூத்துக்குடி:

உலக ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில்  ரோச்  பூங்கா முதல் படகு  குழாம் வரை  விழிப்புணர்வு  நடைபயிற்சி நடைபெற்றது. 

நடைபயிற்சியை  கனிமொழி எம்.பி.,  அமைச்சர் கீதாஜீவன்,  மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

இந்நிகழ்ச்சியில்   மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ,  பொறியாளர் சுரேஷ் ரூபன் பொன்னையா,மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், இந்திய மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் சிவசைலம், மருத்துவ துனண கண்காணிப்பாளர் டாக்டர் குமரன், தாசில்தார் செல்வகுமார், 

பகுதி செயலாளர் சுரேஷ் குமார், நிர்மல் ராஜ், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ரமேஷ், கவுன்சிலர் கீதா மாரியப்பன், பொன்னப்பன்,ஜான், உள்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,  தி.மு.க. நிர்வாகிகள், பணியாளர்கள், நடைபயிற்சி குழுக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.