கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

தேர்தல் விதிமுறை மீறலா? அதிகாரிகள் தீவிர ஆய்வு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு உடன்குடி பகுதியில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

உடன்குடி:

உடன்குடி நகர தேர்தல் நடத்தும்அலுவலரும், தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலருமான பாபு தலைமையில் ஊழியர்கள் உடன்குடி நகரபகுதி முழுவதும் வாக்குச்சாவடி எப்படி உள்ளது, தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகிறதா? அரசு கட்டிங்களில் தேர்தல் பிரசாரம் செய்யப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இதேபோல் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சப்&இன்ஸ்பெக்டர்கள் முனியாண்டி, ராஜன், அய்யப்பன் மற்றும் போலீசார் உடன்குடி பேரூராட்சி பகுதி முழுவதும் இரவு பகலாகதொடர்ந்து ரோந்துசுற்றிஆய்வு செய்து வருகின்றனர்.

அரசியல் கட்சியின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் ஆகியோர் வீடு வீடாக சென்று தீவிரமாக ஓட்டுசேகரித்து வருகின்றனர்.

சிலவேட்பாளர்கள் அதிகாலை 5 மணிக்கே முக்கிய நபர்களை வீடுகளில் தனியாக சென்று வாக்கு கேட்கின்றனர். உடன்குடி நகர பகுதிகளில் தேர்தல் பிரசாரம் சுறுசுறுப்பாக உள்ளது.

SCROLL FOR NEXT