ஊரணிகுளத்தில் புதுப்பிக்கும் பணி நடந்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

உடன்குடி ஊரணிகுளத்தில் 50 ஆண்டுகளுக்கு பின் புதுப்பிக்கும் பணி

உடன்குடி அருகே ஊரணிகுளம் உள்ளது. காலப்போக்கில் செடிகளும், உடைமரங்களும் வளர்ந்து தண்ணீர் வராமல் போய்விட்டது. இந்நிலையில் தற்போது 50 ஆண்டுகளுக்கு பின்னர் ஊரணிகுளத்தை புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

உடன்குடிநடுக்காலன் குடியிருப்பு மீன் கடை பஜார் அருகே சுமார் 5 ஏக்கர்பரப்பளவில் ஊரணிகுளம் உள்ளது.

இந்த குளத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் தேங்கி நின்றது.

காலப்போக்கில் காட்டுசெடிகளும், உடைமரங்களும் வளர்ந்து, இந்த குளத்திற்கு தண்ணீர் வராமல் போய்விட்டது.

இந்த ஊரணி குளத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. இக்குளத்தை இப்பகுதி மக்கள் மறந்துவிட்டனர்.

தற்போது ஊர் கூடி ஊரணி அமைப்போம் என்ற அமைப்பின் சார்பில் பொது மக்கள்பங்களிப்புடன், இந்த ஊரணிகுளம் இருந்தஇடத்தை கண்டுபிடித்து, குளத்திலிருந்த காட்டுச் செடிகளையும் உடை மரங்களை முழுமையாக அப்புறப்படுத்தி தண்ணீர் வரும் கால்வாய் மற்றும் குளத்தை சுற்றியும் பல பணிகள் நடந்து வருகிறது.

இந்த குளத்தில் முழுமையாக சீர் செய்து தண்ணீர் கொண்டு வந்தால், உடன்குடி நகரப் பகுதியில் நிலத்தடிநீர் பாதுகாக்கப்படும்.

மேலும் ஆழ்குழாய் அடிபம்பு, கிணறுகள் நல்ல தண்ணீராக மாறும். இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT