தென்திருப்பேரை:
தென்திருப்பேரை பேரூராட்சி சிவசுப்பிரமணியபுரத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் கொடை விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் முக்கிய நாளான நேற்று செவ்வாய் கிழமை மாலை 6 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
மேலும் மாலை 7 மணி அளவில் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், இரவு முளைப்பாரி எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை மற்றும் பூஜையும் இரவு 12 மணி சாமக்கொடையும் நடைபெற்றது.
நையாண்டி மேளம், செண்டை மேளம், வில்லிசை நிகழ்ச்சியும், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. வியாழக்கிழமை இரவு கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
மேலும் 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.