போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
உள்ளூர் செய்திகள்

ஆத்தூரில் தென்மண்டல அளவிலான யோகா போட்டி

ஆத்தூரில் தென்மண்டல அளவிலான யோகா போட்டி நடைபெற்றது.

மாலை மலர்

ஆத்தூர்:

தென்மண்டல அளவிலான யோகா போட்டி ஆத்தூரில் நடைபெற்றது.

 இப்போட்டியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

 யோகா போட்டியினை டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த துணை தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

யோகா பள்ளி நிர்வாகிகள் செந்தில், பாலாஜி, முத்துராஜா, கார்த்தி, முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போட்டியின் தலைமை நடுவராக கருணாகரன் மற்றும் சுரேஷ்குமார் பங்கேற்றனர்.

வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு   (வார்டு கவுன்சிலர்) ராம்குமார், தொழிலதிபர் பொன்பாண்டி, சாகுபுரம் ஜெனிபர்  மற்றும்  கார்த்திகேயன், சங்கரநாராயணன் , மணிகண்டன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.  

போட்டி  ஏற்பாடுகளை  சுவாமிநாதன் செய்திருந்தார். விழாவில் ஏராளமான பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.