கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

முக்காணியில் பைக் மோதி பள்ளி மாணவன் படுகாயம்

முக்காணியை சேர்ந்த பள்ளி மாணவன் கிளாஸ்டன் என்பவர் பைக் விபத்தில் படுகாயமடைந்தார்.

ஆத்தூர்:

ஆத்தூர் அருகே உள்ள முக்காணி பரதர் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மகன் கிளாஸ்டன் (வயது 16). முக்காணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரு கிறான்.

நேற்று கிளாஸ்டன் சைக்கிளில் முக்காணி பஜாருக்கு சென்றான்.

அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே செல்லும் போது ஆத்தூரை சேர்ந்த ரஞ்சித் என்பவர் தூத்துக்குடியிலிருந்து ஆத்தூரை நோக்கி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கிளாஸ்டன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

 இதில் மாணவன் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

கிளாஸ்டனை மீட்டு ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT