அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த ரஜினி மக்கள்மன்றத்தினர். 
உள்ளூர் செய்திகள்

அமைச்சர் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திருச்செந்தூர், உடன்குடி ஒன்றிய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

மாலை மலர்

திருச்செந்தூர்:

திருச்செந்தூர், உடன்குடி ஒன்றியத்தை சேர்ந்த ரஜினி மக்கள் மன்றத்தினர் தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். 

அதன்படி திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மாணிக்கம், உடன்குடி ஒன்றிய செயலாளர் முருகானந்தம் ஆகியோர் தலைமையில் திருச்செந்தூர் ஒன்றிய துணை செயலாளர்கள் நடேஷ், நமச்சிவாயம், கந்தசாமிபுரம் மன்ற தலைவர் செந்தில்வேல், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சங்கரசுப்பிரமணியன் உள்ளிட்ட 25-க்கும் மேற் பட்டோர்   தி.மு.க.வில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் நகர்மன்ற தலைவர் சிவஆனந்தி, தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், நகராட்சி துணை தலைவர் செங்குழிரமேஷ்,  நகர பொறுப்பாளர் வாள்சுடலை, நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், சுதாகர், ஆனந்த ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந் தனர்.