தென்திருப்பேரை:
தென் திருப்பேரை பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு நேற்று தேவேந்திர குல வேளாளரின் பண்பாட்டு நிகழ்ச்சியான “பொன் ஏர் பூட்டும்“ நிகழ்ச்சி நடைபெற்றது. வயலில் பூஜை செய்து குட்டக்கரை பால்ராஜ் முதல் உழவு செய்து நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.
இதில் தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில் மற்றும் துவாதஸம் டிரஸ்ட் சார்பாக தென் திருப்பேரை சுற்று வட்டார தேவேந்திர குல வேளாளர்களின் ஊர்களான குட்டக்கரை, தென்திருப்பேரை, மேலக்கடம்பா, கோட்டூர், குருகாட்டூர் மணத்தி, கல்லாம்பாறை உட்பட 13 ஊரை சேர்ந்த ஊர்க் குடும்பர்கள், தலைவர்கள் மற்றும் தென்திருப்பேரை சுற்று வட்டார தேவேந்திர குல வேளாளர் ஆன்மீக அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு மாலை மற்றும் மரியாதை வழங்கி சிறப்பித்தனர்.
இதில் தேவேந்திர குல வேளாளர் ஆன்மீக அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார், செயலாளர் கணபதி, பொருளாளர் மாரி துரைசாமி, துணைதலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.