மாயமான பாபுசங்கர். 
உள்ளூர் செய்திகள்

மாயமான நில அளவையர் எங்கே? - போலீசார் விசாரணை

நாசரேத்தை சேர்ந்த நிலஅளவையர் பாபுசங்கர் என்பவர் கடந்த 10-ந் தேதி மாயமான நிலையில் அவர் எங்கு சென்றார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நாசரேத்:

நாசரேத் கீழத்தெருவைச் சேர்ந்தவர் பாபுசங்கர் (வயது 39).   இவருக்கு திருமணமாகவில்லை.

இவருக்கு  தாயார் மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இவர் திசையன்விளை தாலுகா அலுவலகத்தில் நிலஅளவையராக பணிபுரிந்து வந்தார்.

தினமும்  நாசரேத்தில் இருந்து வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு திருமணம் முடிக்க அவரது  உறவினர்கள் வரன் பார்த்து வந்தனர். இந்நிலையில் 10-ந்தேதி பாபுசங்கர், அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை வீட்டில் வைத்து வெளியே சென்று வருவதாக கூறி சென்றுள்ளார்.

அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் எங்கு என்றார்? என தெரியவில்லை.

இதுகுறித்து அவரது தாயார் மாரிமுத்து நாசரேத் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பட்டாணி விசாரணை நடத்தி வருகிறார்.

பாபுசங்கர், திருமணம் முடிக்க ஏற்பாடு செய்து வந்ததால் மாயமானாரா ? அல்லது வேறு காரணமா? என போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.