இலவச பூங்கா பயணத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து ஒரு மாணவருக்கு குடற்புழு நீக்க மாத்திரையை வழங்கிய காட்சி 
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி பூங்காக்களில் ஒருவாரம் நுழைவு கட்டணம் கிடையாது

மாணவர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி பூங்காக்களில் ஒருவாரம் கட்டணம் இல்லாமல் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சி யில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பல்வேறு பூங்காக்கள் அமைக் கப்பட்டுள்ளது. அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

இந்நிலையில் பாளை ரோடு தமிழ்ச்சாலை பகுதியில் கட்டப்பட்டுள்ள கோளரங்கம், மானுடவியல் பூங்கா, போக்குவரத்து பூங்கா, ஐவகை நில பூங்கா ஆகியவற்றை மாநகராட்சி பள்ளி மாணவ- மாணவியர் இன்று முதல் ஒருவாரம் இலவசமாக கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. 

அதனை அமைச்சர் கீதாஜீவன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

மாநகராட்சி பகுதியில் பல்வேறு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் இலவசமாக கண்டுகளிக்கும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

இளைஞர்கள் வாகனங் களை முறைப்படி இயக்கும் வகையில் அது குறித்து விதிமுறைகளை தெரிந்து கொள்ளும் வகையில் போக்குவரத்து பூங்கா அமைக்கப் பட்டுள்ளது.  

இந்த பூங்காவிற்கு அனைவரும் சென்று அங்குள்ள விழிப்புணர்வு  மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். இது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இன்று காலை முதல் ஏராளமான மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் சென்று பார்வையிட்டனர். 

SCROLL FOR NEXT