கோப்புபடம். 
உள்ளூர் செய்திகள்

பெண்ணை தாக்கியவர் கைது

புதியம்புத்தூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

புதியம்புத்தூர்:

புதியம்புத்தூர் தெற்கு காலனியை சேர்ந்தவர் முத்துமணி(வயது 52). இவர் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

இவருக்கும் , புதியம்புத்தூர் வட்ட தெரு பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் (52) என்பவருக்கும் இடையே கோவில் நிர்வாகம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று மாலை ஜெயசங்கர், முத்து மணியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரது மனைவியை அவதூறாக பேசி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

இச்சம்பவம் குறித்து முத்துமணி புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய சங்கரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT