உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள ஜெ.ஜெ.நகர், மொந்தல் நகர், சண்முகானந்தா நகர் ஆகிய 3 கிராமங்கள் வழியாக திருச்செந்தூருக்கு தனியார் மினி பஸ்கள் பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருந்தன.
அவசர தேவைக்கு உடன்குடி மற்றும் திருச்செந்தூருக்கு இந்த 3 கிராமங்களும் சென்று வர மினிபஸ் மிகவும் வசதியாக இருந்தது. சில வருடங்களுக்கு முன்பு இவ்வழியாக சென்ற தனியார் மினிபஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.
பின்பு இவ்வழியாக அரசு பஸ்கள் இயக்கப்படும் என்று பல ஆண்டுகளாக சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்தவிதமான அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.
எனவே நிறுத்தப்பட்ட வழித்தடத்தில் தனியார் மினிபஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.