சூரிய உதயத்தில் கடலில் பதனிட்டு சூரியப் பிரகாச சுத்த அய்யா வைகுண்டரை அவதார பதிக்கு அழைத்து வரும் போது எடுத்த ப 
உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 190-வது அவதார தினவிழா

அய்யா வைகுண்டர் 190-வது அவதார தின விழா திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் இன்று நடைபெற்றது.

திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் அய்யா வைகுண்டர் 190-வது அவதார தின விழா இன்று நடைபெற்றது.

இதையொட்டி நேற்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, காலை 6 மணிக்கு அன்னதர்மமும், பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடையும் நடைபெற்றது.

தொடர்ந்து ஒரு மணிக்கு அன்னதர்மம், மாலை 7 மணிக்கு பணிவிடை, அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி, தொடர்ந்து அன்னதர்மம் நடைபெற்றது.

190-வது அவதார தினமான இன்று அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல் அபயம் பாடுதல், காலை 6.27 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிட்டு சூரிய பிரகாச சுத்த அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 தொடர்ந்து, அவதார தின விழா பணிவிடையும் அன்ன தர்மம்,  இனிமம் வழங்குதல் நடைபெற்றது.