தூய்மைப்பணி நடந்த போது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

கருங்கடல் ஊராட்சி பகுதியில் தூய்மைபணி

தூத்துக்குடி மாவட்டம் கருங்கடல் ஊராட்சி பகுதியில் தூய்மைபணி நடைபெற்றது.

மாலை மலர்

சாத்தான்குளம்:

சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார  நிலையம், கருங்கடல் ஊராட்சி சார்பில் முழு தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.

 பனைக்குளம் அங்கன்வாடி மையம் அருகில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு கொசு புழு புகாதவாறு மூடி அமைத்து கொடுக்கப்பட்டது.

இதில் சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ், மகேஷ்குமார், ஊராட்சி செயலர் முருகேசன், தன்னார்வலர் ஜெயராஜ் உள்ளிட்ட அங்கன்வாடி பணியாளர்கள், டெங்கு மஸ்தூர் பணியாளர்கள்,  தூய்மைபணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இப்பணியில் ஈடுப்பட்டனர்.

மேலும் கிராம மக்கள் குப்பைகளை கண்ட இடத்தில் கொட்டாமல் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் கொட்டி நிர்வாகத்தினருக்கு ஒத்துழைத்து  கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.