முகாமில் யூனியன் சேர்மன் பாலசிங் சான்றிதழ் வழங்கிய போது எடுத்தபடம். 
உள்ளூர் செய்திகள்

உடன்குடி யூனியனில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்

உடன்குடி யூனியனில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

உடன்குடி:

உடன்குடி யூனியனில் உள்ள 17 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம்யூ னியன் கவுன்சிலர் கூட்ட அரங்கத்தில் நடந்தது. முகாமிற்கு யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார்.

 வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செழியன் முன்னிலை வகித்தார். உறுப்பினர்களுக்கு அரசின் திட்டங்கள், புதிய அறிவிப்புகள் குறித்து மக்களுக்கு தெரிவிப்பது உள்ளிட்ட புத்தாக்க பயிற்சியினை பாண்டியம்மாள், ஈஸ்வரி ஆகியோர் அளித்தனர். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணி மற்றும் யூனியனுக்குட்பட்ட 17 கிராமபஞ்சாயத்துக்களில் உள்ள வார்டு உறுப்பினர்கள், துணைத்தலைவர்கள் கலந்து கொண்டனர். 

பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT