கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்புப் பெற்ற கோவில்பட்டி அருகே கழுகுமலையில் உள்ள கழுகாசலமூர்த்தி கோவில்.
தென்பழனி என்று அழைக்கப்படும் குடவரை கோவிலான இங்கு கடந்த 9-ந் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல்பூஜை, விளாபூஜை, காலசந்திபூஜை மற்றும் கழுகாசல மூர்த்தி வள்ளி, தெய் வானை, சோமாஸ் கந்தர், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடந்து வந்தது.
ஒவ்வொரு நாள் இரவும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ-., கழுகுமலை பேரூராட்சி தலைவர் அருணா, துணை தலைவர் சுப்பிர மணியன் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி கார்தீஸ்வரன் ஆகியோர் தேரோட்டத்தினை தொடங்கி வைத்தனர்.
இன்று (வெள்ளக்கிழமை) இரவு 8 மணிக்கு தீர்த்தவாரியும்,, தபசு காட்சியும் நடைபெறுகிறது. 11-ம் திருநாளன்று இரவு பட்டினப்பிரவேசம் நடைபெறுகிறது. 13-ம் திருநாளை முன்னிட்டு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.