புத்த பூர்ணிமா விழா நடைபெற்ற போது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் சார்பில் புத்த பூர்ணிமா விழா

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் சார்பில் புத்த பூர்ணிமா விழா நடைபெற்றது.

மாலை மலர்

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே உள்ள  பெரியார் திடலில் தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் புத்த பூர்ணிமா, டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, அயோத்தி தாசர் ஆகியோர் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

 விழாவில்  700  பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் ஆற்றலரசு, கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் கலைவேந்தன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாநில துணை செயலாளர் மதுரை மாலின், 

நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் அரசூர் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் சி.பா.பாரிவள்ளல், மாவட்ட செய்தி தொடர்பாளர் வடிவேல் முத்து, மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி,  சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளர்  தமிழ்ப்பரிதி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  நகர செயலாளர் உதயா நன்றி கூறினார்.