செய்துங்கநல்லூர்:
திருச்செந்தூர்-பாலக்காடு ரெயில் கடந்த 2 வருட காலமாக கொரோனாவால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
அதற்கு முன்பு திருச்செந்தூர்- பழனி இடையே பயணிகள் ரெயிலாக இயங்கியது. அப்போது இந்த ரெயில் செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் நின்று சென்றது.
தற்போது இந்த ரெயில் எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்கப்படுவதுடன் செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படவில்லை.
இதுகுறித்து பல்வேறு கடிதங்களை பல்வேறு அமைப்புகள் மூலமாக
ரெயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பியும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.