செங்கோட்டை:
செங்கோட்டை ஆனந்த விநாயகர் கோவில் வளாகத்தில் உலக நன்மை வேண்டி திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. அதனைதொடா்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. தொடா்ந்து உலக நன்மை வேண்டியும் திருவாசகம் குழுவினா் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனா்.