வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. 
உள்ளூர் செய்திகள்

வருவாய் தீர்வாயம்

வலங்கைமானில் வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.

நீடாமங்கலம்:

வலங்கைமான் வட்டாட்சியர் அலுவல கத்தில் பசலி 1431ஆம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாய கணக்கு முடித்தல் நடைபெற்று வருகிறது. அதில் பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு  உடனடியாக தீர்வு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கீதா, வருவாய் தீர்வாய அலுவலராக இருந்து பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

வலங்கைமான் தாசில்தார் சந்தான கோபாலகிருஷ்னன் முன்னிலை வகித்தார், தனி தாசில்தார் தேவகி, மண்டல துணைதாசில்தார் ஆனந்தன், வருவாய் ஆய்வாளர்கள் சுகுமார், ராஜ்குமார், பழனிச்சாமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT