கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் 
உள்ளூர் செய்திகள்

குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி - கலெக்டர் தகவல்

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி நடந்து வருவதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தகவல் தெரிவித்தார்.

மாலை மலர்

திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ் ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்ப தாவது:-

திருவாரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவல கத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கி நடந்து வருகிறது.

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வர்கள் தங்களது வேலை வாய்ப்பு அலுவலக அடை யாள அட்டை, தேர்வுக்கு விண்ணப்பம் செய்த நகல், குடும்பஅட்டை மற்றும் ஆதார் அட்டையின் நகல் ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன் பெறலாம்.

மேலும், போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர் கொள்ளும் வகையில் ஆன் லைனில் உரிய இணையதள மேடை வாயிலாக பயிற்சி அளிக்க உரிய வழிமுறைகள் வேலைவாய்ப்பு துறையினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 இணையதளத்தில் காணொளி வழி கற்றல், மின்னணு பாடக்குறிப்புகள், மின்புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள், மாதிரி தேர்வுவினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற் றுள்ளன. 

அதில் வரும் பாடக் குறிப்புகளை தமிழ், ஆங்கிலத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.