எடப்பாடி பழனிச்சாமி 
உள்ளூர் செய்திகள்

திருவாரூருக்கு நாளை எடப்பாடி பழனிச்சாமி வருகை

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் காலை 9 மணிக்கு அமைப்புச் செயலாளர் டாக்டர் கோபால் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.நன்னிலம் வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டச் அ.தி.மு.க. செயலாளர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி நாளை (வெள்ளிக்கிழமை) திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் காலை 9 மணிக்கு அமைப்புச் செயலாளர் டாக்டர் கோபால் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.

இதனை முன்னிட்டு நன்னிலம் வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம் உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து மேலும் ஆயிரம் ஆண்டு காலத்திற்கு விவசாயத்தை பாதுகாத்த எடப்பாடி பழனிச்சாமி நன்னிலம் வருகை தருவதை முன்னிட்டு அ.தி.மு.க நிர்வாகிகளும், செயல் வீரர்களும் திரண்டு வந்து வரவேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT