ரெட்கிராஸ் சார்பில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி 
உள்ளூர் செய்திகள்

பேரிடர் மேலாண்மை பயிற்சி

திருவாரூரில் ரெட்கிராஸ் சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.

மாலை மலர்

திருவாரூர்:

திருவாரூரில் ரெட்கிராஸ் சார்பில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நடைபெற்றது. இந்திய ரெட் கிராஸ் சேர்மன் ராஜ்குமார் தலைமை வகித்தார். 

திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் இந்தியன் ரெட்கிராஸ் மாநில பொருளாளர் வரதராஜன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் ரெட்கிராஸ் நிர்வாகக் குழு உறுப்பினர் நடராஜன், எண்கண் மணி, திருத்துறைப்பூண்டி செயலாளர் மணிமாறன், நன்னிலம் செயலாளர் பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

முதல் நாள் பயிற்சியில் இயற்கை பேரிடர்களின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீட்பு பணிகளில் எவ்வாறு ஈடுபடுவது, முதலுதவி பற்றி செயல்முறை விளக்கத்துடனும் எடுத்துரைக்கப்பட்டது.

2---&வது நாள் பயிற்சியில் ஆபத்து மற்றும் பேரிடர் காலங்களில் சுயநினைவில்லாமல் இருக்கும் ஒருவருக்கு எவ்வாறு செயற்கை சுவாசம் கொடுத்து உயிரைக் காப்பாற்றுவது என செயல்முறை விளக்கத்துடன் 

பயிற்சி அளிக்கப்பட்டது. 

மேலும் மாரடைப்பு மற்றும் விஷக்கடி குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. 

சுவாசப் பாதையில் திடீரென உணவு அடைக்கும் போது அவர்களை 

எவ்வாறு மீட்பது, சாலை விபத்து, வலிப்பு மற்றும் வெள்ளம் போன்ற 

நிகழ்வில் சிக்குபவர்களை எவ்வாறு மீட்பது என்பதை பற்றி 

குறும்படங்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.

3-ம் நாள் விபத்தின்போது அடிபட்டவரை எவ்வாறு மீட்பது, எலும்பு முறிவு, தீக்காயம், ரத்தப்போக்கு போன்ற சமயங்களில் எவ்வாறு கட்டு கட்டுவது அதன் வகைகள் என்ன என்பதனை பற்றி செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இறுதியில் பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

பயிற்றுனர்கள் சாமிநாதன், செந்தில்குமார், பெஞ்சமின், துளசி துரை மாணிக்கம், சுரேஷ்குமார், ஏழுமலை ஆகியோர் பயிற்சி அளித்தனர்.