கேபிள் டி.வி பொதுநல சங்க மாநாடு. 
உள்ளூர் செய்திகள்

திருத்துறைப்பூண்டியில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்க மாநாடு

திருத்துறைப்பூண்டியில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்க மாநாடு நடந்தது.

மாலை மலர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி தாலுக்கா, தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் 

பொதுநல சங்க தாலுக்கா மாநாடு நடைபெற்றது. மாவட்ட செயலாளர் 

செந்தில்குமார் தலைமை வகித்தார். 

மாவட்ட தலைவர் செந்தில் ஒருங்கிணைப்பாளர் நக்கீரன் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் வெள்ளைச்சாமி, தஞ்சை மாவட்ட 

தலைவர் தங்கையன் ஆகியோர் பேசினர்.  இதில் அனைத்து 

கேபிள் ஆபரேட்டர்கள், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

மணிகண்டன் வரவேற்றார். குருமூர்த்தி நன்றி கூறினார்.

கூட்டத்தில் புதிய தாலுக்கா நில்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர், அனலாக் முறையில் சிக்னல் முறையாக வழங்கப்படாத நிலையில் ஆபரேட்டர்களிடம் பாக்கி தொகையை வசூல் செய்ய நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு அந்த பாக்கி தொகையை 

தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.