திருவாரூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ கு.சீனிவாசன், மாநில தேர்தல் பிரிவு இணைச்செயலாளர் மலர்வேந்தன், தொழிற்சங்க துணைத்தலைவர் ஆசைத் தம்பி, தொழிற்சங்க இணைச் செயலாளர் சத்திய மூர்த்தி, வக்கீல் பிரிவு இணை செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர
செயலாளர் ஆனந்தராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒன்றிய,நகர பகுதியில் உள்ள நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.