ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 
உள்ளூர் செய்திகள்

திருத்துறைப்பூண்டியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருத்துறைப்பூண்டி:

மழையால் பயிர்களை இழந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகே அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சண்முகசுந்தர், மாவட்ட துணைச் செயலாளர் அம்பிகாபதி, ஒன்றிய கோட்டூர் ஜீவானந்தம், ஒன்றிய செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில்  ஒன்றிய வடக்கு முத்துப்பேட்டை பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் நாராயணசாமி, பேரூர் நகர செயலாளர் அன்பழகன், முத்துப்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கனி அமுதா ரவி, முன்னாள் நகர மன்ற தலைவர் உமாமகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி,  மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT