உள்ளூர் செய்திகள்

ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது விபரீதம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

செங்கம்:

செங்கம் அருகே புதுப்பாளையம் ஜி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவகாமி (வயது 60). இவர் புதுப்பாளையம் அருகே கூலி வேலை செய்துவிட்டு ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

புதுப்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர் பாராத விதமாக ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து விபத் துக்குள்ளானது.

இதில் சிவகாமி ஆட்டோவில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காககொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து புதுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.