உள்ளூர் செய்திகள்

வாலிபர் அடித்துக் கொலை

முன்விரோத தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?போலீசார் விசாரணை

மாலை மலர்

வெம்பாக்கம்:

செய்யாறு அடுத்த தூசி நத்த கொள்ளையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 30). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் நண்பர் வீட்டுக்கு சென்று வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. வெம்பாக்கத்தில் காஞ்சிபுரம்- கலவை சாலையில் தனியார் பள்ளி எதிரே குளக்கரையில் செல்வராஜ் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக பிரம்மதேசம் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

அப்போது செல்வராஜின் அருகே இரும்பு ராடும் அவரது தலையில் வெட்டு காயங்களும் இருந்தது. வாலிபரை மர்ம நபர் யாரோ இரும்பு ராடால் சரமாரியாக அடித்தும், கத்தியால் வெட்டியும் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் செல்வராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜ் முன்விரோத தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.