உள்ளூர் செய்திகள்

உணவு பாதுகாப்பு துறை சார்பில் சிறுதானிய விழிப்புணர்வு ஊர்வலம்

ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் ஏராளமானோர் கலந்து ெகாண்டனர்

மாலை மலர்

செய்யாறு:

செய்யாறு டவுன், ஆரணி கூட்ரோட்டில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் சிறுதானிய விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் மோகனவேல் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், நகர செயலாளர் வழக்கறிஞர் கே.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒ.ஜோதி எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன், உணவு பாதுகாப்பு அலுவலர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் ஞானவேல், சின்னதுரை, ராம் ரவி, துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.