உள்ளூர் செய்திகள்

சீனியர் தடகள சங்க பொதுக்குழு கூட்டம்

வருகின்ற நவம்பர் மாதம் நடக்கிறதுநிர்வாகிகளும் கலந்து கொண்டனர்

வேங்கிக்கால்

திருவண்ணாமலையில் மாவட்ட சீனியர் தடகள சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கார்த்தி வேல்மாறன் தலைமையில் நடைபெற்றது. வருகின்ற நவம்பர் மாதம் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில சீனியர் தடகள போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் வீரர்கள் வர உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்திற்கு செயலாளர் சுரேஷ்குமார் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

SCROLL FOR NEXT