உள்ளூர் செய்திகள்

சாலை பணியாளர் சங்க ஆண்டு விழா

உபகரணங்கள் வழங்கப்பட்டதுஏராளமானோர் கலந்து கொண்டனர்

மாலை மலர்

ஆரணி:

ஆரணி அடுத்த பையூர் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகரில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் சாலை பணியாளர் சங்கத்தின் 24-ம் ஆண்டு விழா செய்யாறு கோட்ட தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆசிரியர் சங்கத் தலைவர் மனோகரன் பங்கேற்று சாலை பணியாளர் சங்க கொடியை ஏற்றினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.

மேலும் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இதில் அரசு ஊழியர்கள் வட்ட தலைவர் பாஸ்கரன்,வட்டக் கிளைச் செயலாளர் பரசுராமன்,ஓய்வூதிய சங்க தலைவர் அமர்தலிங்கம் மற்றும் கோட்டை நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இறுதியில் சாலை பணியாளர் சங்க நிர்வாகி எழிலன் நன்றி கூறினார்.