தூசி:
பீகார் மாநிலம் தானாசிகர் பாராஹாத்தாலுகா நாராயணபூர் அருகே உள்ள பக்பூல் கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சு முர்மு (வயது 25). இவரது மனைவிஷம்மி (23). இருவரும் சிப்காட்டில் நடைபெறும் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த னர். இதற்காக அருகே உள்ள சோழவ ரம் கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை அஞ்சு முர்மு அருகே உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்ததில் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்.