உள்ளூர் செய்திகள்

கண்ணமங்கலம் சிவசக்தி வள்ளி முத்துமாரி கோவிலில் கணபதி ஹோமம்

சீரமைப்பு பணிகள் நடைபெற்றது புனித நீர் அபிஷேகத்துடன் பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் உள்ள சிவசக்தி வள்ளி முத்து மாரியம்மன் கோவிலில் நன்கொடையாளர் மூலம் ரூ.4 லட்சம் மதிப்பில் தரைக்கு டைல்ஸ், கேட் ஆகிய சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.

இதையடுத்து நேற்று காலை கோவிலில் கணபதி ஹோமம் நடைபெற்றது. இதில் கோவில் விழாக்குழு தலைவர் கே.டி. குமார், ஓய்வு கண்டக்டர் சேகர், ஏழுமலை, பேருராட்சி வார்டு உறுப்பினர்கள் மணி விஜய் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அம்மனுக்கு புனித நீர் அபிஷேகத்துடன் பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT