உள்ளூர் செய்திகள்

திரவுபதி அம்மன் கோவிலில் முன்னாள் எம்.எல்.ஏ. சாமி தரிசனம்

தீமிதி விழா நன்கொடை வழங்கினார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மாலை மலர்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஊராட்சியைச்சேர்ந்த வீரக்கோவில் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் கடந்த 18-ந்தேதி மகாபாரத சொற்பொழிவுடன் அக்னி வசந்த விழா தொடங்கியது.

இதைமுன்னிட்டு தினமும் கோவில் வளாகத்தில் மகாபாரத சொற்பொழிவும் நடக்கிறது.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் நேற்று கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் தீமிதி விழாவிற்கு நன்கொடை வழங்கினார்.

அவருக்கு கோவில் விழாக்குழு சார்பில் நாட்டாமை சரவணன் சால்வை அணிவித்து வரவேற்று பிரசாதங்கள் வழங்கினர்.

இதில் படவேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் அன்பழகன், பால்கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சங்கர், முன்னாள் கவுன்சிலர் ரகு, கிளைக் கழக செயலாளர்கள் பொன்பன்னீர், ராமலிங்கம், ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.