உள்ளூர் செய்திகள்

மரம் வேரோடு சாய்ந்து விழுந்து மின்கம்பம் உடைந்தது

சூறாவளி காற்றுடன் மழை பெய்தது மின் இணைப்பு துண்டிக்கபட்டன

மாலை மலர்

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கபட்டன.

மேலும் ஆரணி பழைய ஆற்காடு ரோடு அருகே சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்ந்ததால் சாலை ஓரமாக இருந்த மரம் வேரோடு சாய்ந்து மின்கம்பம் மீது விழுந்தது.

இதனால் மின்கம்பம் உடைந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டன.

இதனையடுத்து தகவலறிந்த வந்த ஆரணி தீயணைப்பு துறை மற்றும் மின்சார வாரியதுறையினர் மின் இணைப்பை துண்டித்து விழுந்து கிடந்த மரத்தை அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.