உள்ளூர் செய்திகள்

மளிகை கடையில் ரூ.30 ஆயிரம் திருட்டு

தஞ்சை மாதாக்கோட்டை பகுதியில் மளிகை கடை உள்ளது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ .30 ஆயிரம் திருடுபோய் உள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாதாக்கோட்டை வங்கி ஊழியர் காலனியை சேர்ந்தவர் ராஜ்மோகன். இவரது மனைவி பிரதீபா (வயது 35 ).

இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கடையில் இவரது மகன் கார்த்திக் இருந்து வியாபாரத்தை கவனித்தார்.

அப்போது கல்லாப்பெட்டியை பார்த்தபோது அதில் இருந்த பணத்தைக் காணவில்லை. இது குறித்து பிரதீபா தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதில் கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ .30 ஆயிரம் திருடுபோய் உள்ளது.

அதனை கண்டுபிடித்து தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.