உள்ளூர் செய்திகள்

திசையன்விளை அருகே தனியார் பஸ்சில் மூதாட்டியின் செயின் திருட்டு

சரஸ்வதி நேற்று பரப்பாடியில் இருந்து திசையன்விளைக்கு தனியார் பஸ்சில் சென்றார். திசையன்விளை பஸ் நிலையத்தில் இறங்கி பார்த்தபோது அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை.

நெல்லை:

நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி பகுதியை அடுத்த பாப்பான்குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 59). இவர் நேற்று பரப்பாடியில் இருந்து திசையன்விளைக்கு தனியார் பஸ்சில் சென்றார்.

திசையன்விளை பஸ் நிலையத்தில் இறங்கி பார்த்தபோது அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திசையன்விளை போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியின் கழுத்தில் கிடந்த செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டுபோன செயினின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

SCROLL FOR NEXT