தேனி:
தேனி அருகே மதுராபுரி - அழகாபுரி சாலையில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உப்புக்கோட்டை மேலத் தெருவைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இந்த நிறுவனத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த காப்பர் வயர், அலுமினிய வயர், பீஸ் கட்டை உள்ளிட்ட மின் உபகரணப் பொருட்களை திருடிச் சென்றனர். மறு நாள் நிறுவனத்துக்கு சென்ற நாகராஜ் பொருட்கள் திருடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அல்லிநகரம் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மின் உபகரணப் பொருட்கைள திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.