உள்ளூர் செய்திகள்

தொடர் தலைமறைவாக இருந்த 32 பேர் அதிரடி கைது

செக் மோசடி வழக்குகளில் சிக்கியும் தலை மறைவாக இருப்பவர்களை கைது செய்ய கோவை சரக ஐ.ஜி உத்தரவிட்டார். பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருப்பவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் முழுவதும் கோர்ட் பிடி வாரண்டு பிறப்பித்தும், செக் மோசடி வழக்குகளில் சிக்கியும் தலை மறைவாக இருப்பவர்களை கைது செய்ய கோவை சரக ஐ.ஜி உத்தரவிட்டார்.

இதை அடுத்து நாமக்கல் நகர போலீசார் டிஎஸ்பி சுரேஷ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையிலான போலீசார், பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருப்பவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நாமக்கல் நகர பகுதி யில் மட்டும் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தும் தலைமறைவாக இருந்த வர்கள் மற்றும் செக் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த வர்கள் என 15 நாட்களில் 32 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மேலும் தலை மறைவாக உள்ள நபர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் நாமக்கல் புறநகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

SCROLL FOR NEXT