பண்ருட்டி திருவதிகையில் புகழ்பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கூடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். 
உள்ளூர் செய்திகள்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று காலை நடந்தது

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று காலை நடந்தது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது பெரியநாயகி உடனுறைவீரட்டானேஸ்வரர் கோவில்.

மாலை மலர்

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது பெரியநாயகி உடனுறைவீரட்டானே ஸ்வரர் கோவில். இது 5ஆயிரம் ஆண்டு களுக்குமுற்பட்டது. The procession to the Travancore Veerattaneswarar temple took place this morningஇங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம்சுவாதிதினத்தன்று10நாட்கள்பிரம்மோற்சவம்நடைபெறுவதுவழக்கம்.இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவவிழா கடந்த 3-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும்காலை மாலைஇருவேளையும் அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை, யாக வேள்வி ஆகியவை நடைபெற்று சாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை நடைபெற்றுவீதிஉலா காட்சிநடைபெற்றுவந்தது. இன்று(11-ந் ) காலை பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாவானதேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி திரிபுர சம்ஹாரமூர்த்தி சுவாமிக்குஅதிகாலை 4:30 மணிக்கு சிறப்புஅபிஷேகம், ஆராதனை,விசேஷ பூஜைகள், நடைபெற்றது. திரிபுரசம்ஹாரமூர்த்தி சிறப்புமலர்அலங்காரத்தில்திருத்தேரில்எழுந்தருளினார். பின்னர் தேர் பூஜைகள் நடந்து 8 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது. பெரியதேரில் சம்கார மூர்த்திஎழுந்தருளினார். சின்ன தேரில் விநாயகர், முருகர்,சண்டிகேஸ்வரர் எழுந்தருளினார் தேர் புறப்பாடுநடைபெற்றதும்கூடியிருந்தஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹரஹர மகாதேவா, ஓம் நமசிவாயம், திருச்சிற்றம்பலம் என விண்ணதிரமுழங்கினர்நாதஸ்வரம்,கைலாயவாத்தியம், மேளதாளங்கள்சங்கொலி முழங்கமாடவீதியில் தேர் பவனி வந்தது.