உள்ளூர் செய்திகள்

சிறுமியின் ஆபாச படத்தை இணையதளத்தில் பரப்புவதாக மிரட்டல் விடுத்தவர் கைது

குறுஞ்செய்தியை அனுப்பிய வரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.திருமுல்லைவாயில் பவானி தெரு பகுதியை சேர்ந்த கோபி கைது செய்தனர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அருகே கீழையூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் ரூ.5 ஆயிரம் தராவிட்டால் சிறுமியின் புகைப்படத்தை இணையதளத்தில் பரப்பி விடுவதாகவும், இதனை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி சிறுமிக்கு குறுஞ்செய்தி வந்தது.

இதைத் தொடர்ந்து குறுஞ்செய்தியை அனுப்பிய வரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் விசாரணை நடத்தியதில் சென்னை திருமுல்லைவாயில் பவானி தெரு பகுதியை சேர்ந்த கோபி (வயது20) என்பவர் சிறுமியின் ஆபாச படத்தை இணையதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுபோன்ற குற்ற செயல்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க 8428103090 என்ற எண்ணில் என்னை தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ் சிங் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT