உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் இரும்பு கடைக்குள் புகுந்து திருடிய கும்பல் கைது

நாமக்கல் துறையூர் சாலையில் ஸ்ரீதர்ஷினி ஸ்டில்ஸ் என்ற கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருட்களை திருடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த அந்த பகுதியினர் நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .

நாமக்கல்:

நாமக்கல் நகரில் சமீப காலமாக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாமக்கல் துறையூர் சாலையில் ஸ்ரீதர்ஷினி ஸ்டில்ஸ் என்ற கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருட்களை திருடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த அந்த பகுதியினர் நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .

உடனே அங்கு விரைந்து சென்ற எஸ். ஐ. சங்கீதா மற்றும் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் திருச்சி மாவட்டம் முசிறி ஜம்புகாடு பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (வயது 33), சுரேஷ் (40), சங்கர் (27), நாமக்கல் நல்லிபாளையம் கிழக்கு வீதியை சேர்ந்த நல்லி என்ற குலசேகரன் ஆகியோர் என்பது தெரியவந்தது.

4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிடிப்பட்ட மர்ம கும்பல் மேலும் சில இடங்களிலும் கைவரிசை காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT