அரசியல் கட்சி விளம்பரங்களை அழிக்கும் பணி 
உள்ளூர் செய்திகள்

தஞ்சை மாநகராட்சியில் சுவர் விளம்பரங்கள் அழிப்பு

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதால் தஞ்சை மாநகராட்சியில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டது.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட  அடுத்த சில மணி நேரங்களிலேயே தமிழகம் முழுவதும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

அந்த வகையில் தஞ்சை மாவட்டத்திலும்  தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. 

தேர்தல் விதிமுறைப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எழுதப்பட் டிருக்கும் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட வேண்டும்.

அதுபோல் சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் அரசியல் கட்சி சம்பந்தமான நோட்டீசுகள் மற்றும் சாலை யோரங்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பதாகைகள் அகற்றப்பட வேண்டும்.

இதன்படி தஞ்சையில் கோர்ட் ரோடு, பஸ் நிலையம், மேம்பாலம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கட்சி பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் அப்புறப்படுத்தபட்டு வருகிறது. 

சுவரில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் இந்த பணி மும்முரமாக நடைபெறுகிறது.

வல்லம் பேரூராட்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றும் விதமாக வல்லம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பஸ் நிலையம், 

கடைவீதியில் அரசியல் கட்சியினரால் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகளை பேரூராட்சி பணியாளர்கள் அகற்றினர்.

மறைந்த தலைவர்களின் சிலைகளை சுற்றி வரையப்பட்ட சின்னங்கள் அனைத்தையும் துணிகளால் மறைத்தனர். இதில் வல்லம் பேரூராட்சி 

செயல் அலுவலர் பிரகந்தநாயகி, துப்புரவு மேற்பார்வையாளர் 

வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.