கோப்புப்படம். 
உள்ளூர் செய்திகள்

ரெயில்வே நடைமேடை விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கீடு

கும்பகோணம் ரெயில் நிலையத்தில் நடைமேடை விரிவாக்கத்துக்கு தேவையான நிலம் ஒதுக்க வேண்டும்

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு மயிலாடுதுறை தொகுதி முன்னாள் எம்.பி. ஆர்.கே.பாரதிமோகன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய பதவி காலத்தில் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் 

பயணிகள் வசதிக்காக இரண்டு மற்றும் மூன்றாம் நடைமேடைகளில் 

24 ரெயில் பெட்டிகள் நிற்கும் வகையில் நீட்டிப்பு செய்ய மத்திய ரெயில்வே துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்து அதற்கான ஒப்புதலையும், 

நிதி ஒதுக்கீட்டையும் பெற்றுத் தந்தேன்.

அந்த பணிகள் நிறைவேற்ற கூடுதல் நிலம் ஆர்ஜிதம் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் ரெயில்வே துறை 2017-ம் ஆண்டே கோரிக்கை அனுப்பியது. 

இருப்பினும் இதுநாள் வரை வருவாய் துறை நிலம் கையகப்படுத்தி 

ரெயில்வே வசம் ஒப்படைக்கவில்லை என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

மேலும் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தால் 

நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டதற்கான பணி இன்னும் தொடங்கப்படவில்லை.

இதனால் ரெயில்வே துறை அந்த நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்யவும் வாய்ப்புள்ளது. 

எனவே தாங்கள் இது தொடர்பாக நேரடியாக கண்காணித்து கும்பகோணம் ரெயில்வே நிலையத்தில் நடைமேடை நீட்டிப்பு பணிகளுக்கு தேவையான நிலத்தை மேலும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக கையகப்படுத்தி ரெயில்வே வசம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT