கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

தஞ்சை மாநகராட்சியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 48 பேருக்கு கிடைத்த ஓட்டுகள் 2,265.

தஞ்சை மாநகராட்சியில் 48 வார்டுகளில் போட்டியிட்டு 2265 வாக்குகளை நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ளனர்.

மாலை மலர்

தஞ்சாவூர்

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வழக்கம் போல் நாம் தமிழர் கட்சி தனித்து களம் இறங்கின. தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் 48 வார்டுகளில் நாம் தமிழர் கட்சி  வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் போட்டியிட்ட அனைத்து வார்டுகளிலும் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்று  தோல்வியடைந்தது. 

மொத்தம் போட்டியிட்ட 48 வார்டுகளிலும் சேர்த்து அந்தக் கட்சி வேட்பாளர்கள் 2,265 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தனர். 7-வது வார்டில் தி.மு.க வேட்பாளர் பெற்ற 2506 வாக்குகளை விட நாம் தமிழர் கட்சி 48 வேட்பாளர்கள் பெற்றிருந்த வாக்குகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.